பூலப்பாளையம், வாரக்காடு பகுதிகளில் மழை காரணமாக உடைந்த ரோடு, தடுப்பணைகளை கலெக்டர் பார்வையிட்டார்- சேதங்கள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


பூலப்பாளையம், வாரக்காடு பகுதிகளில் மழை காரணமாக உடைந்த ரோடு, தடுப்பணைகளை கலெக்டர் பார்வையிட்டார்- சேதங்கள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x

மழை காரணமாக பூலப்பாளையம், வாரக்காடு பகுதிகளில் சாலை உடைப்பு மற்றும் தடுப்பணை உடைப்புகளை பார்வையிட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மழை சேதங்கள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு

மழை காரணமாக பூலப்பாளையம், வாரக்காடு பகுதிகளில் சாலை உடைப்பு மற்றும் தடுப்பணை உடைப்புகளை பார்வையிட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மழை சேதங்கள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பூலப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் பலத்த மழையால் ஆங்காங்கை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டுநாசுவம்பாளையத்தில் இருந்து பெரியபுலியூர் அருகே உள்ள பூலப்பாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோடு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

இதுபோல் பெரியபுலியூர் ஊராட்சி ராமகவுண்டன் வலசு ராசாங்காட்டு ஏரிக்கரை மழை காரணமாக உடைப்புக்கு உள்ளாளது. கரை உடைப்பால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளம் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தியது.

வாரக்காடு

அங்குள்ள வளையக்கார பாளையத்தில் உள்ள வாரக்காடு தடுப்பணை உடைந்தது. வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ரோடு சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல்கள் அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று நேரடியாக பூலப்பாளையம், ராசாங்காட்டு எரி, வாரக்காடு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரகாஷ், தாசில்தார்கள் பாலசுப்பரமணியம், ரவிச்சந்திரன், வட்டார ளர்ச்சி அதிகாரிகள் தங்கவேல், பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

கலெக்டர் உத்தரவு

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குறிப்பாக மேட்டுநாசுவம்பாளையம், பெரியபுலியூர் பகுதிகளில் சாலை உடைப்புகள், ஏரி மற்றும் தடுப்பணை உடைப்புகள் குறித்து அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து விரைவாக திட்ட அறிக்கை அளிக்க வேண்டும். பணிகளை நபார்டு நிதி மற்றும் ஊராட்சி நிதிகளில் மேறகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் சாலை துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விரைவாக பணியைதொடங்கவும், பணி நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை அமைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.Related Tags :
Next Story