அணைப்பகுதிகளில் மீண்டும் மழை


அணைப்பகுதிகளில் மீண்டும் மழை
x

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் கடந்த வார தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் நிரம்பி வழிந்தது. பல பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மழை குறைந்தால் கோதையாற்றில் மிதமான தண்ணீர் வர தொடங்கியதும் திற்பரப்பு அருவியில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை தணிந்து வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மிதமான மழை பெய்தது. இதேபோல் குலசேகரம், திற்பரப்பு, களியல், திருநந்திக்கரை உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

மாவட்டத்தில் மழை தணிந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரப்பர் மரங்களில் பால் வடிப்பு தொழில் நடந்து வந்தது. இந்தநிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக பால்வடிப்பு மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story