மழைநீர் வடிகால்வாய் பணி: ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து போலீசார்
மழைநீர் வடிகால்வாய் பணி காரணமாக ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை,
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈ.வெ.ரா. சாலையில் சென்டிரலில் இருந்து கோயம்பேடு சந்திப்பை நோக்கி செல்லும் திசையில் சுதா ஓட்டல் முன்பு சாலையின் குறுக்கே (நாயர் மேம்பாலம், தாசபிரகாஷ் சந்திப்பு இடையே) நெஞ்சாலை துறையினர் சார்பில் (11-ந்தேதி) இன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த சாலையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
* ஈ.வெ.ரா. சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
* நாயர் மேம்பாலம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி தாசபிரகாஷ் சந்திப்புக்கு செல்லலாம்.
* தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதி இல்லை.
* தாச பிரகாஷ் சந்திப்பில் இடது புறம் திரும்பி ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலம் புறம் திரும்பி மறுபடியும் வலதுபுறம் திரும்பி நாயர் மேம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா. சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது