கடையநல்லூர் பகுதியில் மழை


கடையநல்லூர் பகுதியில் மழை
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலோடு சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றன. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story