நாமக்கல்லில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல்லில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல்:
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 6.30 மணி அளவில் நாமக்கல், செல்லப்பா காலனி, நல்லிபாளையம், முதலைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ½ மணி நேரத்துக்கு மேல் நீடித்த மழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழையாக பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை செம்மேடு-12, பரமத்திவேலூர்-10, சேந்தமங்கலம் -6, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-4, மோகனூர்-4, திருச்செங்கோடு -3, நாமக்கல் -2, எருமப்பட்டி -2, குமாரபாளையம் -1. நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 44 மி.மீட்டர் ஆகும்.