நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மாதேவியில் 18 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேபோல் கன்னடியன் கால்வாய் பகுதி, வீரவநல்லூர், பத்தமடை, கூனியூர், சுத்தமல்லி, கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.

எனினும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 20 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 42.09 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.55 அடியாகவும் உள்ளது.

1 More update

Related Tags :
Next Story