தா.பேட்டை பகுதியில் மழை


தா.பேட்டை பகுதியில் மழை
x

தா.பேட்டை பகுதியில் மழை பெய்தது.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Related Tags :
Next Story