திருவண்ணாமலையில் மழை
திருவண்ணாமலையில் மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நேற்று அதிகாலையில் மழை பெய்தது. பின்னர் பகலில் மிதமான மழையும், மதியத்திற்கு மேல் பலத்த மழையும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.
இந்த மழையினால் சாலையில் சென்றவர்கள் கையில் குடையுடனும், ரெயின் கோட்டு அணிந்த படியும் சென்றனர். தொடர்ந்து நேற்று பெய்த மழையின் காரணத்தினால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனேக பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story