வால்பாறையில் 4-வது நாளாக மழை


வால்பாறையில் 4-வது நாளாக மழை
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயல் காரணமாக வால்பாறையில் நேற்று 4-வது நாளாக மழை பெய்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

மாண்டஸ் புயல் காரணமாக வால்பாறையில் நேற்று 4-வது நாளாக மழை பெய்தது.

4-வது நாளாக மழை

வால்பாறையில் கடந்த 2 மாதமாக கடும் வெயில் நிலவி வந்தது. ஆனால் இரவில் குளிர்ந்த இதமான சூழல் இருந்தது. மழை இல் லாத நிலையிலும் 2 மின் நிலையங்களும் இயங்கி வருகிறது. பரம் பிக்குளம் -ஆழியாறு (பி.ஏ.பி.) திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. மழை இல்லாததால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர் மட்டம் 146 அடியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக வால் பாறையில் நேற்று 4-வது நாளாக பகல் மற்றும் இரவு நேரங் களில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதால் வால்பாறை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மின் உற்பத்தி

மேலும் மழையால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. அதோடு மின் உற்பத்தி நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் செல்கிறது.

அது போல் பரம்பிக்குளம் அணை வழியாக ஆழியாறு அணைக் கும் தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் சமவெளி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகள்

வால்பாறையில் குளிர் பனிக்காலம் வர உள்ளது. இதையொட்டி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளும் வர உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள்.

இதற்காக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளை முன் கூட்டியே முன் பதிவு செய்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் கொரோனா முடிந்து உள்ள நிலையில், இந்த ஆண்டு குளிர் பனிக்காலத்தை அனுபவிக்க அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழையளவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ). வருமாறு:-

சோலையார் அணை-11, பரம்பிக்குளம்-2, அமராவதி அணை -2, வால்பாறை-4, அப்பர் நீராறு-8, லோயர் நீராறு-3, பெரு வாரி பள்ளம்- 10, அப்பர் ஆழியார்-2, நெகமம்-5.2, சுல்தான்பேட்டை-11.

1 More update

Next Story