சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலுடன் கனமழை...!
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கிண்டி, வேளச்சேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, பம்மல், தண்டையார்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அதேவேளை, சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story