மழை நீரில் நனைந்த சீருடை, புத்தகங்கள்
மழை நீரில் நனைந்த சீருடை, புத்தகங்களை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலக மேற்கூரை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் மழை பெய்யும் போது அலுவலகத்தில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையின் போது இந்த அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதில் ஆலங்காயம் வட்டாரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய புத்தகங்கள், சீருடைகள், இலவச பைகள் ஆகியவை மழை நீரில் மூழ்கியது. அலுவலக கோப்புக்களும் நனைந்து உள்ளன.
இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் சென்று சீருடைகள், புத்தகங்கள் நனைந்திருப்பதை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அலுவலக பதிவேடுகள், ஆசிரியர்களின் பதிவேடுகள் வைக்கப்பட்டிருந்த அறைையயும் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டிடத்தின் மேற்கூரைகளை உடனடியாக புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
வட்டார கல்வி அலுவலர் சித்ரா, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.