நகராட்சி பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்


நகராட்சி பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் நகரின் மையப்பகுதியான பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக இப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறந்து மாணவ- மாணவிகள் வரும்பட்சத்தில் இந்த தண்ணீர் அகற்றப்படாமல் தேங்கி நின்றால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களும் பெரும் சோதனையை சந்திக்க நேரிடும். இப்படியே தண்ணீர் தேங்கி நின்றால் மாணவர்களுக்கும், தொற்று நோய் ஆசிரியர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

ஏற்கனவே வகுப்பறை பற்றாக்குறை உள்ள நிலையில் இதுபோன்று மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவோ, தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகள் எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பள்ளியின் அருகிலேயே 100 மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் குளம் உள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீரை, அந்த குளத்திற்கு செல்லும் வகையில் வழிசெய்தால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காது என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story