திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் சூறைக்காற்றுடன் மழைவேப்பமரம் வேரோடு சாய்ந்தது


திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் சூறைக்காற்றுடன் மழைவேப்பமரம் வேரோடு சாய்ந்தது
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு லேசான சாரல் மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதவிர திருக்கோவிலூர் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் காற்றில் பறந்தன. இதேபோல் திருக்கோவிலூரை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மரங்களும் விழுந்தன.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கோடையில் மழை பெய்ததால் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story