நாமக்கல்லில் 33 மி.மீட்டர் மழைப்பதிவு


நாமக்கல்லில் 33 மி.மீட்டர் மழைப்பதிவு
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே ஒவ்வொரு பகுதியாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக நாமக்கல் கலெக்டர் அலுவலக சுற்று வட்டார பகுதிகளில் 33 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

கலெக்டர் அலுவலகம்-33, நாமக்கல்-28, ராசிபுரம்-22, புதுச்சத்திரம்-20, பரமத்திவேலூர்-16, திருச்செங்கோடு-8, மோகனூர்-8, சேந்தமங்கலம்-7, மங்களபுரம்-6, குமாரபாளையம்-6, கொல்லிமலை-5, எருமப்பட்டி-3.


Next Story