நாமக்கல்லில் 117 மில்லி மீட்டர் மழைப்பதிவு
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 117 மி.மீட்டர் மழை பதிவானது. இதனிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-117, புதுச்சத்திரம்-52, சேந்தமங்கலம்-52, நாமக்கல்-50, ராசிபுரம்-38, எருமப்பட்டி-25, கொல்லிமலை-4, மங்களபுரம்-3,குமாரபாளையம்-2.
அதன்படி மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 343 மி.மீட்டர் ஆகும்.
Related Tags :
Next Story