தூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
x

தூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

மழைநீர் வடிகால்

தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தூத்துக்குடி பகுதியில் 7.46 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.14 கோடியே 45 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் புதிய பஸ் நிலையம் விநாயகர் கோவில் முதல் இசக்கியம்மன் கோவில் வரை உள்ள நகர்ப்புற சாலையை ரூ.4 கோடியே 83 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்துதல், சுமார் 1,055 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதே போன்று தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் லெவிஞ்சிபுரம் சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சி

இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் திருவேங்கட ராமலிங்கம், மாநகர செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி என்ஜினீயர் பிரின்ஸ், மண்டல தலைவர் பாலகுருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story