'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரே இடத்தில் ஜூன் மாதத்தில் 17 செ.மீ. மழை நேற்று முன்தினம் பெய்துள்ளது. இதனால் கத்திப்பாரா மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. மற்ற இடங்களில் சுமார் 4 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்போது நடைபெற்று வரக்கூடிய மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்காக சுமார் 700 மோட்டார்கள் கையிருப்பில் உள்ளன" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.



Next Story