மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது


மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து காட்சி அளித்தது. சில நிமிடங்களில் சாரல் மழையாக தொடங்கி படிப்படியாக பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. கடந்த பல நாட்களாக மழையே பார்க்காத ராமநாதபுரம் மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. மழையால் வெப்பம் தணிந்ததால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் செல்வதற்கு ஆரம்ப காலம் முதல் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிகால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதும் அதனை சரிசெய்து மழைநீர் செல்ல வழிவகுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக விருந்தினர்கள் செல்வதற்கு பாதைகள் சரிசெய்தபோது கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அடைப்பை நேற்று முன்தினம் சரிசெய்ய முயன்றபோது முடியாமல் கைவிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பெய்த மழையில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. காலையில் புறநோயாளிகள் சிகிச்சை நேரத்தில் இவ்வாறு மழைநீர் தேங்கி நின்றதால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மழைநீர் தேங்கி நோயாளிகள் அவதி அடைந்ததால் கட்டிட பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதே போல் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. சாலைகளிலும் மழைநீர் ஆறு போல ஓடியது.

இந்த திடீர் மழை வெப்பத்தை குறைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story