மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மின்னணு காணொலி காட்சி விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர்கள் வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் பிடித்தபடி சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, கடைவீதி வழியாக மந்தைவெளியில் முடிவடைந்தது. வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் 5 நாட்களுக்கு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெறவுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குமார்ராஜ், உதவி நிர்வாக பொறியாளர் ஆத்மலிங்கம், நிலவள வல்லுனர் பிரேமா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story