செம்மாண்டப்பட்டி ரெயில்வேசுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீர்போக்குவரத்து பாதிப்பு
செம்மாண்டப்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓமலூர்
செம்மாண்டப்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுரங்க பாலம்
ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு, மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சேலம்- பெங்களூரு ெரயில்வே தண்டவாளத்தில் காமண்டபட்டி, செம்மாண்டப்பட்டி, காருவள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ெரயில்வே சுரங்க பாலம் உள்ளது.
செம்மாண்டப்பட்டி, பெரியபட்டி, மோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் செம்மாண்டப்பட்டி பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்க பாலத்தின் வழியாகத்தான் ஓமலூர், சேலம் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேங்கிய மழைநீர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் செம்மாண்டப்பட்டியில் ெரயில்வே சுரங்க பாலத்தில் 8 அடி உயரத்திற்கு மேல் மழைநீர் தேங்கியது. இதனால் செம்மாண்டப்பட்டி, பெரியபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நகர்ப்பகுதிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். இதனை அடுத்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் ெரயில்வே துறை சார்பில் மோட்டார் வைத்து தண்ணீரை தாழ்வான இடத்துக்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.