பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி


பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி
x

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பவானி,

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, தடுப்பணைகள், குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. நேற்று அவ்வப்போது பலத்த மழையாகவும், தூரல் மழையாகவும் பெய்து வந்தது.

இந்த நிலையில், பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதைபோல தொட்டிப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. முட்டி அளவிற்கு தேங்கிய தண்ணீரால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தாளவாடி, தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, காளிதிம்பம், ராமராணை, நெய்தாளபுரம் ஆகிய கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையால் அள்ளபுரதொட்டி கிராமத்தில் 6 வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் 6 வீடுகளிலும் இரவில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

தொடர் மழையால் நெல், கரும்பு, சோளம் பயிரிட்டிருந்த விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்ததால் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story