மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம்
கல்வராயன்மலையில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன் மலையில் மழைக்கால நோய் தடுப்பு குறித்து மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் சுதாகர் அறிவுறுத்தலின் படி கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர் கதிரவன், சுகாதார ஆய்வாளர்கள் கலைச்செல்வி, அருள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதை தடுக்கும் விதம் குறித்தும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள் ரவி, சதீஷ்குமார், சுகாதார செவிலியர் சுசிலா மற்றும் களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்.