ரஜினி சிலை செய்து அசத்திய மண்பாண்ட கலைஞர்
திருப்பூர்
குடிமங்கலத்தையடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக்கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார். இதனால் ரஜினிரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர், லால் சலாம் ரஜினி சிலை செய்திருந்தார். அத்துடன் ரஜினியின் தாய் தந்தை உருவ பொம்மையை செய்து ரஜினிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் நிலையில் ஜெயிலர் படத்தில் வரும் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் சிலையை செய்து அசத்தியுள்ளார். மண்பாண்டங்களை செய்வது மட்டுமல்லாமல் அவ்வப்போது வெளியாகும் ரஜினியின் சிலைகளை செய்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
Next Story