நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் விரைவில் நிதி கொடுப்பார்


நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த்  விரைவில் நிதி கொடுப்பார்
x

நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் விரைவில் நிதி கொடுப்பார் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி திருமண விழாவிற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர் சன்னதி, உண்ணாமலையம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் கூறுகையில், ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பது மிகப்பெரிய சந்தோஷம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்.

விரைவில் திரையில் வெளியாக உள்ள லால் சலாம் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. நடிகர் சங்கத்திற்கு விரைவில் ரஜினிகாந்த் மனதிற்கு ஏற்றவாறு நிதியை கொடுக்க உள்ளார் என்றார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்கிறது என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இதற்கும் ரஜினிகாந்த்திற்கும் சம்பந்தமில்லை, அரசியல் கட்சியினர் மட்டுமே இது தொடர்பாக பேசுவார்கள் என்று கூறினார்.


Related Tags :
Next Story