ராஜீவ்காந்தி நினைவுநாள் கடைபிடிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி மலர் தூவி மரியாதை செய்தனர்.
ராஜீவ்காந்தி நினைவுநாள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவுநாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நகர காங்கிரஸ் கட்டிடத்தில், அவரின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.வீரப்பன், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, பொறியாளர் அணி பொன்முடி, தொழிற்சங்க நிர்வாகி செல்வம், முன்னாள் மாநில மாணவர் காங்கிரஸ் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம், வெண்ணந்தூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி மாளிகையில் நடந்தது. இதையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், பிள்ளாநல்லூர் பேரூர் தலைவர் சண்முக சுந்தரம், கவுன்சிலர் லலிதா, நிர்வாகிகள் மாணிக்கம், சண்முகம், கோவிந்தராஜ், பழனிசாமி, மதுரைவீரன், மோகன்ராஜ், பாஸ்கர், பிரகஸ்பதி, வடிவேல், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிங்காரம் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 32-வது நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைத் தலைவர் காசி பெருமாள், நகர செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.