ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நினைவு தினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.டி. உதயம் தலைமை தாங்கினார். குளச்சல் தொகுதி பிரின்ஸ் எம்.எல்.ஏ. ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதுபோல் சுற்று வட்டார பகுதிகளான வில்லுக்குறி, காரங்காடு, நெட்டாங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்தோணி முத்து, விஜிலியாஸ், பால்துரை, ஜெயசிங், பெலிக்ஸ் ராஜன், ஜெமினிஸ், ஜோஸ் பேட்ரிக்ஸ், லாரன்ஸ், ஐசக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்மனை
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை ஈஞ்சக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பொன்மனை நகர காங்கிரஸ் தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் வினுட்ராய், நிர்வாகிகள் காஸ்ட்டன் கிளீட்டஸ், சசிகுமார், பென்ஜஸ், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேர்கிளம்பி
திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா தலைமையில் வேர்க்கிளம்பியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், கண்ணனூர் ஊராட்சி கவுன்சிலர் ஜோண், பொதுச்செயலாளர் ஜாண் இக்னேசியஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், ஓஸ்டின் ஞானஜெகன், தங்கநாடார், ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் கண்ணனூர், கொல்வேல், ஆற்றூர், முளகுமூடு, மாத்தார், குமரன்குடி போன்ற இடங்களில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்யப்பட்டது.
களியக்காவிளை
மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் களியக்காவிளையில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி சங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணை தலைவரும் விளவங்கோடு ஊராட்சி தலைவருமான லைலா ரவி சங்கர், வன்னியூர் ஊராட்சி தலைவர் பாப்பா, ஒன்றிய கவுன்சிலர் ஜெஸ்டின், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், வழக்கறிஞர் விஜயகுமார், சிரோமணி, ராஜேஷ், தொழிற்சங்க தலைவர் மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.