ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு


ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
x

சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

சேலம்

சேலம்:

சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

சேலம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து துணை மேயர் சாரதாதேவி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாநகர பொது செயலாளர் ராஜகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, அமைப்பு சாரா அணி நிர்வாகி வரதராஜ், விவசாய அணி தலைவர் சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சி.பி. வைத்திலிங்கம் தலைமை தாங்கி ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அயோத்தியாப்பட்டணம் வட்டார தலைவர் காந்தி, நகர தலைவர் கோவிந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி, அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சிவகுமார், வட்டார பொருளாளர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story