காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள்
பள்ளிகொண்டாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது நினைவு தினம் பள்ளிகொண்டா காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிகொண்டா நகர காங்கிரஸ் தலைவர் கே.இ.அக்பர் பாஷா தலைமை தாங்கினார். நகர செயலாளர் பலராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மன்சூர், சிக்கந்தர், செல்வம், குமார், முன்னாள் கவுன்சிலர் தாயிராபானு, தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story