குளத்துப்பாளையத்தில் ரேக்ளா பந்தயம்


குளத்துப்பாளையத்தில் ரேக்ளா பந்தயம்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

குளத்துப்பாளையத்தில் ரேக்ளா பந்தயம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அடுத்த குளத்துப்பாளையத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. 200 மீட்டர், 300 மீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது. ரேக்ளா பந்தயத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வடசித்தூர், உடுமலை, மெட்டுபாவி, செட்டியக்காபாளையம், நெகமம், சூலூர், தொண்டாமுத்தூர், செஞ்சேரி, உடுமலை, திருப்பூர், தாராபுரம், கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. வண்டிகளில் பூட்டிய காளைகள் சீறிபாய்ந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story