குளித்தலை அருகே ரேக்ளா பந்தயம்


குளித்தலை அருகே ரேக்ளா பந்தயம்
x

குளித்தலை அருகே நடந்த ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூர்

ரேக்ளா பந்தயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, புதுப்பாளையம், குட்டப்பட்டி, எழுநூற்றுமங்களம் போன்ற ஊர் பொதுமக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்பட அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

பந்தயம் இரட்டை மாடு, சிறிய மற்றும் பெரிய ஒற்றை மாடு, பெரிய, சிறிய, புதிய குதிரைகள், சைக்கிள் போன்ற பல்வேறு போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன.

பரிசுகள்

இதில் பல்வேறு குளித்தலை உள்பட மாவட்ட மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு மாவட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் நீண்ட வரிசையில் நின்று போட்டியை கண்டு களித்தனர்.

1 More update

Next Story