மத்திய அரசை கண்டித்து ஊர்வலம்
மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடந்தது.
திருவாரூரில், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி மேம்பாலம் வழியாக வர்த்தக சங்க மண்டபத்தை வந்தடைந்தது. மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் பழனிசாமி ஊர்வலத்தின் நோக்கம் குறித்து பேசினார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், பலகோடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.