சந்தானராமர் கோவிலில் ராமநவமி விழா
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநவமி விழா
நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரால் கிபி.1761-ம் ஆண்டு கட்டப்பட்டது. மன்னருக்கு புத்திரபாக்கியம் அருளியதால் இ்ந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சாமி வீதி உலா
இதை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி கொடியேற்றப்பட்டது.. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு சாமி வீதி உலா புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் ராசி, செயல்அலுவலர் மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர். இந்த விழா வருகிற 9-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.