ராமேசுவரம்-தனுஷ்கோடி பகுதியில்இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியில் அங்கு இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை அறிவுறுத்தி உள்ளது.
ராமேசுவரம்,
துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியில் அங்கு இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை அறிவுறுத்தி உள்ளது.
ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகின்றது. காவல் படை நிலையத்தில் 2 அதிவேக ரோந்து கப்பல், தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய 5 ஹோவர்கிராப்ட் கப்பலும் பாதுகாப்பு பணிக்காக உள்ளன. இதை தவிர 2 சிறிய ரோந்து கப்பல்களும் உள்ளன.
இந்த கடலோர காவல் படை நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை கமாண்டோக்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையத்தில் உள்ள ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடலோர காவல் படை வீரர்கள் தினமும் கப்பல்களில் ரோந்து சென்று வருகின்றனர்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
இந்த நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்துறை நிலையத்தில் உள்ள ரோந்து கப்பலில் இருந்தபடி காவல் படை கமாண்டோ வீரர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் ராமேசுவரம், தனுஷ்கோடி இடைப்பட்ட வடக்கு கடல் பகுதியான பாக்ஜல சந்தி கடல் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிதுப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடைப்பட்ட கடல் பகுதியில் அங்கு இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை அறிவுறுத்தி உள்ளது.ற்சியில் ஈடுபட உள்ளனர்.
எனவே, அந்த பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய கடலோர காவல் படைமூலம் எழுத்துப்பூர்வமாக மீன்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீன்துறை அதிகாரிகள் மூலம் ராமேசுவரம் பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.