ராமேசுவரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை


ராமேசுவரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் 2-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் லட்சுமி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் ராமேசுவரம் லட்சுமி நகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே தினமும் மாலை 6 மணிக்கு மேல் குறைந்த மின்னழுத்தம் காரணத்தால் அனைத்து வீடுகளில் உள்ள டி.வி., மின்விசிறி உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் சேதமடைந்தன. இதை தொடர்ந்து லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ராமேசுவரம் மின்வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து லட்சுமி நகரில் உடனடியாக குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்யும் வகையில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வார்டு கவுன்சிலர் பிரபாகர் தலைமை தாங்கினார். போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் உதவி மின்வாரிய பொறியாளர் சண்முகநாதன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். வருகின்ற ஜனவரி மாத இறுதிக்குள் லட்சுமி நகர் பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story