ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும்


ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும்
x

ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி வரை திருப்பதி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, திண்குக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக திருப்பதிக்கு சென்றடையும்.

இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை 4.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரெயில் இன்று இரவு 11.30 மணிக்கு காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story