மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை:கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை:கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 24 July 2023 7:00 PM GMT (Updated: 24 July 2023 7:01 PM GMT)

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கூடலூர், பந்தலூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புறக்கணிப்பு

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மோதல் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவுடன் கண்டனங்களும் எழுந்தது.

இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரியும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து வக்கீல்கள் சங்க தலைவர் பரசுராமன் தலைமையில் கோர்ட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் தன்யா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வக்கீல்கள் சாக்கோ, சுகுமாரன், அப்சல், ஸ்ரீஜேஷ், விஜயகுமார் உள்பட அனைத்து வக்கீல்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் பந்தலூர் நீதிமன்றத்திலும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை தடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story