கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை


கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறனார்.

திருவாரூர்

ஐம்பெருவிழா

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நகர-வட்டார கிளையின் சார்பில் ஐம்பெருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சத்தியநாராயணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கிருபாராணி, நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இதில் மாநில தலைவா லெட்சுமி நாராயணன், மாவட்ட செயலாளர் ஈவேரா, மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநில துணை செயலாளர் ஜூலியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச்செயலாளருமான ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு துறையிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி அதில் இருந்து விடுபட்டு இருக்கிறோம். எனவே காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தமிழக அரசு முயற்சிக்க கூடாது.

ரத யாத்திரை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரியும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைமையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து டெல்லிவரை ரத யாத்திரை புறப்பட இருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story