பாரதியார், செல்லம்மாள் சிலை ரதத்துக்கு மாணவர்கள் மரியாதை


பாரதியார், செல்லம்மாள் சிலை ரதத்துக்கு மாணவர்கள் மரியாதை
x

பாரதியார், செல்லம்மாள் சிலை ரதத்துக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

மதுரை

மதுரை.

மகாகவி பாரதியார், அவரது மனைவி செல்லம்மாள் சிலைகள் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் நிறுவப்பட உள்ளது. முன்னதாக அந்த சிலை அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் வைத்து சென்னை முதல் கடையம் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப் படுகிறது. இதன்படி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி புறப்பட்ட பாரதியார்- செல்லம்மாள் ரதம் நேற்று மதுரை வந்தது. மதுரை கல்லூரியில் ரதத்துக்கு கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வர் கண்ணன், நெல்லை பாலு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் வரவேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பாரதியார் பணியாற்றிய சேதுபதி பள்ளியில் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த ரதம் வருகிற 31-ந் தேதி கடையத்திற்கு செல்கிறது.

1 More update

Next Story