ரத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது


ரத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ரத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூர்

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ரத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவிற்காக கடந்த 21-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. இதையடுத்து நேற்று திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி போன்ற பூஜைகள் நடத்தப்பட்டன. மலையின் உச்சியில் உள்ள கோவில் கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதன்பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) முதல் பகலில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வகையான வாகனங்களிலும் சாமியின் வீதியுலா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யர்மலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் குடிபாட்டுக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story