ரேஷன் கார்டு திருத்தும் முகாம்
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு திருத்தும் முகாம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் கீழ் பிரதி மாதம் 2-வது வாரத்தின் சனிக்கிழமைகளில் பொதுவினியோக திட்ட மின்னணு குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) குறை தீர்ப்பு திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதத்துக்கான சிறப்பு திருத்த முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல், அல்லது நீக்கம், செல்போன் எண் இணைத்தல், குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட திருத்தங்களுக்குரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து குறைகளை சரி செய்து கொள்ள வேண்டுமாறு திருக்கோவிலூர் வட்ட வழங்கல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.