ஒடிசாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


ஒடிசாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து ரெயிலில் ஒடிசாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7 மணிக்கு முதலாவது நடைமேடையில் ரோந்து சென்றனர். அப்போது பயணிகள் படியேறி செல்லும் இடத்துக்கு கீழே கேட்பாரற்று கிடந்த 30 ரேஷன் அரிசி மூட்டைகளில் மொத்தம் 500 கிலோ அரிசி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில் விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் வாங்கிய அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை புதுச்சேரியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நோக்கி செல்லும் ரெயிலில் கடத்த முயன்ற மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் அரிசி மூட்டைகளை போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story