கேரளாவுக்கு கடத்த முயன்ற 6¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 6¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்  5 பேர் கைது
x

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6¾ டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 6¾ டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீசார் சோதனை

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆரல்வாய்மொழி சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக ஒரு டெம்போ வந்தது. அந்த டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1,700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இந்த அரிசி நெல்லை மாவட்டம் பணக்குடி, காவல்கிணறு ஆகிய பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டெம்போ உரிமையாளரான நித்திரவிளை வடலிகுட்டம் வீட்டை சேர்ந்த ராஜேஷ் (வயது37), சுரேஷ் பாபு (38) மற்றும் ராஜேஷ் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

டிப்பர் லாரி

இதே போல் அருமநல்லூர் அருகே டிப்பர் லாரி மூலமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக லாரி உரிமையாளர் தோவாளை காட்டுப்புதூரை சேர்ந்த அஜித் (23) மற்றும் துவரங்காட்டை சோ்ந்த ஈஸ்வர மூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

-**


Next Story