ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று அம்பை அருகே உள்ள ஆம்பூர் சோதனை சாவடி அருகில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை வர்கீஸ் மகன் இன்பராஜ் (வயது 20) என்பவர் ஒரு ஆட்டோவில் 8 மூடைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்பராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire