காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பணகுடி பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளையை சேர்ந்த ஷாஜின் ராஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 28 மூடைகள் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வள்ளியூரை சேர்ந்த புதியவன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story