ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சோதனையில் சிக்கியது.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சீபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான ரெயில்வே போலீசார் மற்றும் காஞ்சீபுரம் வட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள், திருப்பதி செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். இதில், 30 கிலோ கொண்ட 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி ரெயிலில் பயணிகள் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காஞ்சீபுரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story