ரேஷன் கடையில் முறைகேடு:மேலும் ஒரு விற்பனையாளர் பணி இடைநீக்கம்


ரேஷன் கடையில் முறைகேடு:மேலும் ஒரு விற்பனையாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரிகுளம் அருகே ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தேனி

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், உத்தமபாளையம் அருகே ராமகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் எரணம்பட்டியில் செயல்படும் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனால் அந்த ரேஷன் கடையில் போடி பொதுவினியோகத்திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் முனிராஜா, கூட்டுறவு சங்கத்தின் செயலாட்சியர் மற்றும் களஅலுவலர் பிரித்விராஜ் ஆகியோர் கடந்த 30-ந்தேதி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பொருட்கள் இருப்பு குறைந்ததோடு, முறைகேடுகளும் கண்டறியப்பட்டன. இதையடுத்து அந்த ரேஷன் கடை விற்பனையாளர் ஈஸ்வரனை பணி இடைநீக்கம் செய்ய தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் நேற்று உத்தரவிட்டார். மேலும், ஈஸ்வரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் புகார் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story