தீபாவளியை முன்னிட்டு இன்று ரேஷன் கடைகள் செயல்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக விடுமுறை நாளான இன்றும் வருகிற 10-ந்தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து ரேஷன் கடைகளும் இன்று இயங்கும்.
ஏற்கனவே வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் தீபாவளிக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story