சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் மறு எண்ணிக்கை


சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் மறு எண்ணிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோயம்புத்தூர்


கோவை

சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளராக சுதா, அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளராக சவுந்திர வடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020-ம் அன்று எண்ணப்பட்டு இரவு 10 மணி அளவில் முடிவு அறிவிக்கப்பட் டது. அப்போது முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சவுந்திர வடிவு 2,549 வாக்குகள் பெற்றதாகவும், சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மறு எண்ணிக்கை

இதையடுத்து மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டு அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்திட உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.


Next Story