இடை நின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


இடை நின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
x

பெரணமல்லூர் ஒன்றியத்தில் இடை நின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் அன்மருதை தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய், பழனிவேல், சபிதா, தேவி, வெங்கடேசன், வெங்கடாசலம், தேவநாயகம், ஜவகர் ஆகியோர் ஒரு குழுவாகவும்,

பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா தலைமையில், ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணராஜ், செண்பகவல்லி, விஜயலட்சுமி, இசையருவி ஆகியோர் ருகுழுவாகவும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள அன்மருதை, நெடுங்குணம் ஆகிய ஊர்களில் பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்றமாணவர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அன்மருதை கிராமத்தில் செய்யாற்றின் கரையோரம் செங்கல் சூளையில் வேலைபார்க்கும் குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணி, சந்தோஷ் கோபிகா, மஞ்சுளா, தேவி, சந்தோஷ், சினேகா ஆகியோர் பள்ளிக்கு செல்லாததும்,

நெடுங்குணத்தில் பகவதி, ஷாலினி, நமீதா, ஜோதிகா, திருப்பதி ஆகியோர் இடையில் நின்றதும் கண்டறியப்பட்டனர்.

அவர்களில் அன்மருதை நடுநிலைப் பள்ளியில் 7 பேரும், நெடுங்குணம் பள்ளியில் ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு உபகரணங்கள், பாட புத்தகம், எழுதுபொருள், சீருடை ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா கலந்து கொண்டார்.

---

Image1 File Name : 12983381.jpg

----

Reporter : V.S.RAVI Location : Vellore - CHETPAT


Next Story