கோத்தகிரி நேரு பூங்காவில் மீண்டும் பராமரிப்பு பணி


கோத்தகிரி நேரு பூங்காவில் மீண்டும் பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நேரு பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் தொடந்து வருகை தந்த வண்ணம் உள்ளதால் மீண்டும் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் நேரு பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் தொடந்து வருகை தந்த வண்ணம் உள்ளதால் மீண்டும் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேரு பூங்கா

நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த மே மாதம் 12 வது காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்ட காய்கறி சிற்பங்கள் மற்றும் செல்பி ஸ்டெண்டுகள் அமைக்கப்பட்டன. 2 நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை சுமார் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் என இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி 12 ஆம் தேதிக்கு (அதாவது இன்று) மாற்றி வைக்கப்பட்டது. பள்ளி விடுமுறை நீட்டிக்கபட்டதால் கோத்தகிரி நேரு பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

நடைபாதைகள் புதுப்பிக்கும் பணி

மேலும் இங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வந்ததுடன், அங்கு அமைக்கப்பட்டு இன்னும் அகற்றப்படாமல் உள்ள பறவை வடிவ செல்பி ஸ்டேண்ட்டில் நின்று ஆர்வமாக புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும் தற்போது கண்கவர் மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கி வருகின்றன.

சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதால் பூங்கா ஊழியர்கள் பூங்கா பராமரிப்புப் பணிகளில் முமுரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.


Next Story